Wednesday, November 30, 2011

முல்லைப் பெரியாறு- இங்கிலாந்து சொத்து - மேஜர் ஜான் பென்னிகுயிக்


முல்லைப் பெரியாறு அணை வரலாறு

முல்லைப் பெரியாறு- இங்கிலாந்து சொத்து - மேஜர் ஜான் பென்னிகுயிக் 
மேஜர் ஜான் பென்னிகுயிக் 
மதுரை நாடு என்பது மதுரை மாவட்டம், திருச்சி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டங்களும், தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். 1529 முதல் 1564 வரை விஸ்வநாத நாயக்கர் ஆட்சி செய்தார். 1572 வரை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1595 வரை வீரப்ப நாயக்கரும் ஆட்சி செய்தனர். 1601 வரை இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1623 வரை முத்துவீரப்ப நாயக்கரும், 1659 வரை திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கர் முதல் இராணி மங்கம்மாள் ஆட்சி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் திருவாங்கூர் ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர். பின் போரில் தோல்வியுற்று வரி செலுத்தினர்.1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம் உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.
இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான்
முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.
ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
click to join facebook following link
https://www.facebook.com/groups/125850714193912/133307873448196/?notif_t=like

Thursday, October 27, 2011

HIDDEN FACTS : அணு உலைகள் -மறைக்கப்படும் உண்மைகள் -விஞ்ஞானி தகவல்


அணு உலைகள் -மறைக்கப்படும் உண்மைகள் -விஞ்ஞானி தகவல்


                            We do not need Nuclear Power

                      Fukushima Nuclear Power Plant Reactor 3 explosion on March 14, 2011

        





இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூடக் கோரி விரைவில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவிருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
இப்போராட்டங்களில் கலந்துகொள்ள மேலும் பல விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார் .

அணு பொறியியலில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான் .

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த  அவர் மின் தேவைக்கு அணுசக்தி சிறந்த வழி கிடையாது என 1975  ல் அங்கிருந்து விலகினார் .அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை எனவும் அவை அனைத்தும் மூடப்படவேண்டியவை என்றும் கூறும் அவர் இந்திய அணுமின் நிலையங்கள் குறித்த பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன என்றும் கூறுகிறார் .

1974  முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலுள்ள அணு விஞ்ஞானிகள் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம்  நடத்தியதையும் அதனை ஏற்று 1977 க்கு பிறகு அங்கு அணு உலைகள் புதிதாக கட்டப் படாததையும் நினைவுகூரும் அவர் அமெரிக்காவிலுள்ள பழைய அணுமின் நிலையங்கள் பல ஆபத்து கருதி அனல்மின் நிலையங்களாக மாற்றப்பட்டதாகவும் கூறுகிறார் .

எந்த அணு உலையுமே பாதுகாப்பானவை என்பதற்கு  உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் .அணுமின் நிலையங்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மலிவானது என்று சாதாரண மக்கள்  ஏமாற்றப் படுகிறார்கள்  என்றும்   அணு உலைகளில் கழிவுகளை பராமரிக்க எவ்வளவு செலவாகிறது போன்ற தகவல்கள் ரகசியமாகவே உள்ளன என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .

இந்திய அணு உலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முற்றிலும் மீறப்படுவதாகவும் அணு உலைகளில் விபத்து நிகழ்ந்தால் 30  கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்களை வெளியேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும் அணு உலையைக் குளிர்வித்து கடலில் கலக்கும் நீரிலுள்ள மாசுகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார் .

இந்திய அணுமின் கழகம் NPCIL  2030  க்குள் நாட்டில் மொத்த மின்தேவையில் 8  சதவீதத்தை பூர்த்தி போவதாகக் கூறுகிறது  .இந்திய அணு சக்தியின் தந்தை டாக்டர் ஹோமி பாபா 2000  ஆவது ஆண்டுக்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் 140000  மெகாவாட் மின்சாரம் தயாராகும் என்று கூறினார் .ஆனால் இன்று வரை வெறும் 4500  மெகாவாட்டைதான் கடக்க முடிந்துள்ளது என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .

அணு உலையைக் கட்ட பத்து வருடங்கள் ஆகிறது என்றும் அணு உலையின் செயல்பாட்டை நிறுத்த அணு உலையை கட்ட ஆகும் அதே அளவு செலவு ஆகும் .மேலும் இதற்கான தொழில் நுட்பமும்  இந்தியாவிடம் கிடையாது என்பதால் வேறு வழியின்றி அணு உலைகளின் ஆயுட்காலத்தை சில ஆண்டுகள் நீட்டிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர் .

சமீபத்தில் விபத்து நிகழ்ந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய திருவனந்தபுரத்தை சார்ந்த டாக்டர் யமுனா அணு உலையைக் குளிர்விக்க பயன்படுத்தப் பட்ட கடல் நீர் அப்பகுதியிலுள்ள மொத்த கடல் வளத்தையும் அழிக்கக்கூடியது என்கிறார்.அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடல் உயிரியல் பேராசிரியராக விளங்கும் டாக்டர் அஜித் குமாரும்  இதே கருத்தை கூறுகிறார் .

நன்றி : டி என் எ  இந்தியா
    


  BY உங்கள்  :  Karthik Vaigai

  


Saturday, October 1, 2011

A very motivating video.... this video helps me alot.. whenever you feel ... see this..! Help Supporting In Work and business

whenever you feel ... see this..! Help Supporting In Work and business

Maybe, the most inspirational video ever . . . How to Succeed


Saturday, September 17, 2011

The effect of concentration must must, watch its Amazing! [HQ]


original stacking bricks in bangladesh (no dropping)


must, must, must must, watch its Amazing! [HQ] 






Friday, July 22, 2011

முதலில் கல்லூரியில் சேர்வதற்கான கல்லூரி காலம் ?






1. முதலில் கல்லூரியில் சேர்வதற்கான காரணத்தை மனதில் ஊன்றுங்கள். பொழுதுபோக்கிற்காகவோ, வேறு வழியில்லாமலோ நீங்கள் கல்லூரிக்குள் வரவில்லை என்பதை உணருங்கள்.

2. எந்த வகுப்பில் சேருகிறீர்களோ, அதிலுள்ள பாடங்களை விரும்பிப் படியுங்கள். மனப்பாடம் செய்வது பள்ளியுடன் விடைபெறவேண்டும். பாடங்கள் தொடர்பான புதிய புதிய தகவல்களை இணையம் போன்ற ஊடகங்கள் மூலமாக அதிகம் கற்றுக் கொள்வதே கல்லூரிப் படிப்பாய் இருக்கவேண்டும்.

3. கல்லூரி வாழ்க்கை வகுப்பறைகளைத் தாண்டியது. கல்லூரிகளில் உள்ள குழுக்களில் உங்கள் திறமைக்குத் தீனிபோடும் குழுக்களில் இணைந்து பணியாற்றுங்கள். அது உங்களுடைய திறமைகளை வளர்ப்பதுடன் குழுவாகப் பணிபுரியும் அனுபவத்தையும் வழங்கும்.

4. சமுதாயப் பணி செய்யும் வாய்ப்புகள் கல்லூரி காலத்தில் அதிகமாகவே கிடைக்கும். கல்விக்கு தொய்வு வராத அளவில் சமூக ஈடுபாட்டை வளர்த்துக் கொள்தல் மிகவும் முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான சமூகம் கட்டி எழுப்பப்பட கல்லூரியில் மதிப்பெண்கள் மட்டுமல்ல, நல்ல மதிப்பீடுகளைப் பெறுதலும் அவசியம்.

5. கல்லூரியில் எந்தவிதமான பிரிவினை சிந்தனைகளையும் கொண்டிருக்காதீர்கள். குறிப்பாக அரசியல், சாதி, மொழி போன்றவற்றைக் கடந்து அனைவருடனும் பழகுதல் அவசியம். சாதீய குழுக்கள் போன்றவற்றில் இணையவே இணையாதீர்கள்.

6. கல்லூரி கால வாழ்க்கை உங்களை படிப்படியாக உங்கள் இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக இருப்பது சிறப்பு. அதற்குரிய வகையில் உங்கள் கல்வியையும், பிற குழுக்களுடனான செயலபாடுகளையும், முயற்சிகளையும் வகைப்படுத்திக் கொள்ளுங்கள்

7. கல்லூரி காலம் மாணவர்களுக்கு பரவசகாலம். பெற்றோருக்கோ அது பதட்டத்தின் காலம். எனவே பெற்றோருடன் மனம் விட்டு உரையாடி அவர்களுடைய வழிகாட்டுதலையும், வாழ்த்துக்களையும் பெற மறவாதீர்கள். அது உங்கள் மனதை வலுவூட்டும்.

8. ஆசிரியர்களுடனும், நல்ல நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். மது, கேளிக்கை, போதை போன்ற தவறான வழி காட்டும் நண்பர்களை நாசூக்காய் விலக்கி விடுவது மிகவும் முக்கியம். கல்லூரி நூலகம் மிகவும் முக்கியமான இடம். உங்கள் ஓய்வு நேரங்களை அங்கே செலவிட முயலுங்கள்.

9. பாலியல் ரீதியாக பல தவறுகள் நிகழவும் கல்லூரிகளில் சாத்தியம் உண்டு. பாலியல் விருப்பங்கள், சிற்றின்பத் தேடல்கள் போன்றவற்றை சற்று ஒதுக்கியே வையுங்கள். அதற்கான காலம் இதுவல்ல என்பதும், எல்லா செயல்களுக்கும் உகந்த காலம் ஒன்று உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

10. எவையெல்லாம் முதன்மையானவை, எவையெல்லாம் உங்கள் இலட்சியத்துக்குத் தேவையானவை என்பதில் தெளிவு கொள்ளுங்கள். உங்கள் பலம் பலவீனம் போன்றவற்றின் தெளிவாய் இருங்கள். கவனம் செலுத்த வேண்டிய பாடங்களில் துவக்கம் முதலே கவனம் செலுத்துங்கள்.

11. கல்லூரிக் காலத்திலேயே உங்களுடைய பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை போன்றவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். கூச்ச சுபாவத்தை ஒழிக்கக் கூடிய குழு நிகழ்ச்சிகள், போட்டிகள், கலந்துரையாடல்களில் அதிகம் பங்கு பெறுங்கள். கல்லூரியைத் தாண்டிய உங்கள் வாழ்க்கைக்கு இவை மிகவும் பயனளிக்கும்.

12. கல்லூரிகாலம் மன மகிழ்ச்சிக்கான காலம் என்பதைப் போலவே மன அழுத்தங்களைத் தரும் காலம் கூட என்கின்றன மருத்துவ ஆய்வுகள். சுமார் 25 விழுக்காடு கல்லூரி மாணவர்கள் ஏதோ ஒருவகையில் மன அழுத்தம் அடைகின்றனர் என்கின்றன ஆய்வுகள். எனவே மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் அதைப் பற்றி பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ விவாதித்து மனதைத் தெளிவுபடுத்திக் கொள்தல் அவசியம்

13. பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையும் உள்ளுணர்வும் கொண்டிருங்கள். கல்லூரி காலத்தில் அசட்டுத் துணிச்சலுடன் ஈடுபடும் செயல்கள் உங்களை சிக்கலில் கொண்டு சேர்க்கக் கூடும் என்பதில் கவனமாய் இருங்கள்.

14. பணத்தை சிக்கனமாய் செலவிடப் பழகுங்கள். மாதத்துக்குரிய செலவுப் பட்டியலைத் தயாரிப்பதும், திட்டமிட்டு செலவிடுதலும் பிற்காலத்தில் உங்களுக்கு உதவும். குறிப்பாக வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் செலவுகளைத் திட்டமிடுவது மிகவும் அவசியம்.

15. உங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையோ, அதீத உயர் மனப்பான்மையோ கொண்டிராமல் இயல்பாய் இருக்கப் பழகுங்கள்.

16. ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள். சரியாக உண்டு, சரியாக உறங்கி, தேவையான உடற்பயிற்சிகளுடன் கல்வியைப் பயிலுங்கள். இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, உண்ணாமல் அலைவது போன்ற பழக்கங்களெல்லாம் உருவாக்கும் சிக்கல்கள் பிற்காலத்தில் பெரும் கேடு விளைவிக்கக் கூடும்.

17. நிறைய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் ஆரோக்கியமாக உரையாடுவதும், உங்களுக்குப் பழக்கமற்ற நல்ல செயல்களை செய்ய முனைவதும் என அனைத்துக்குமான அருமையான பயிற்சிக் களம் கல்லூரி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

18. உங்கள் வெற்றியும் தோல்வியும் உங்களுடைய கல்வி ஈடுபாடு, வகுப்பில் கவனம், வருகை, ஒழுக்கம் இவற்றைப் பொறுத்தே அமையும். எனவே அவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள். வகுப்பறைகளுக்கு மட்டம் போடுவதைத் தவிருங்கள். தவிர்க்கும் ஒவ்வோர் வகுப்பின் வாயிலாகவும் நீங்கள் எதையோ இழக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.

19. தெளிவாக குறிப்பு எடுப்பதைப் பழக்கப்படுத்துங்கள். வகுப்பறைகள், நூலகங்கள், உரையாடல்கள் என எங்கெல்லாம் தேவையான தகவல்கள் கிடைக்கின்றனவோ அவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்தல் பயனளிக்கும்.

20. படிப்பில் ஆர்வமுடைய நல்ல ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இணைந்து படிப்பது இரு மடங்கு பலனளிக்கும். நீங்கள் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையெனில் உடைந்து விடாதீர்கள். அதன் காரணத்தைக் கண்டுணர்ந்து அடுத்தடுத்த செமஸ்டர்களில் அதை சரி செய்யுங்கள்.

பெற்றோரும் கல்லூரிக்குப் போங்க..


கல்லூரியில் மகனையோ மகளையோ அனுப்பி விட்டவுடன், தனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு நிரப்ப முடியாத பள்ளம் வந்து விடுவதைப் போலவோ, இனிமேல் தங்கள் கடமை ஏதும் இல்லை என்பது போலவோ பெற்றோர் சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.


கல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோருக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.

1. பிள்ளைகள் கல்லூரியில் என்ன பாடம் எடுத்திருக்கிறார்கள் ? அவர்கள் பயிலும் கட்டிடம் எங்கே இருக்கிறது, அவர்களுடைய ஆசிரியர்கள் யார் யார் ? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

2. பிள்ளைகள் கல்லூரியில் என்னென்ன இயக்கங்களில், குழுக்களில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தலைமைப் பண்பையோ, திறமையோ உருவாக்கும் இயக்கங்களில் இணைய ஊக்கப்படுத்துங்கள்.

3. அவ்வப்போது கல்லூரிக்குச் சென்று பிள்ளைகளின் வருகை, கல்வித் திறமை, ஒழுக்கம் போன்றவற்றைக் கேட்டுணருங்கள். அதற்காக அடிக்கடி கல்லூரிக்குச் செல்லும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள். முடிந்தால் கட்டணங்கள் கட்ட வேண்டிய காலகட்டங்களில் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று வாருங்கள்.

4. அவர்களுடைய வகுப்புத் தோழர்கள், தோழிகள் சிலருடைய தொடர்பு விலாசங்கள், எண்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவசரத் தொடர்புக்கு மிகவும் உதவும்.

5. பிள்ளைகளுக்கு திரும்பத் திரும்ப அறிவுரை கூறுகிறேன் என தொந்தரவு செய்யாதீர்கள், ஓரிரு முறை சொன்னாலே நினைவில் வைத்துக் கொண்டு செயலாற்றும் திறமை பெற்றுவிட்டார்கள் கல்லூரி மாணவர்கள் என உணர்ந்து கொள்ளுங்கள்.

6. கல்லூரி நிகழ்வுகள், காம்பிங், சுற்றுலா போன்றவற்றுக்கு பிள்ளைகளே முடிவெடுக்கட்டும். உங்கள் சிந்தனைகளை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

7. முக்கியமாக பள்ளியில் படித்த குழந்தைக்கும், கல்லூரி மாணவனுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நடவடிக்கைகளில் ஏதேனும் பிழைகள் தென்பட்டால் நாசூக்காகச் சுட்டிக் காட்டுங்கள். தண்டனை கொடுக்கிறேன் என சிக்கலைப் பெரிதாக்காதீர்கள்.

8. கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு பெற்றோர் வழிகாட்டிகளாய் இருக்கவேண்டுமே தவிர கட்டளைகளைப் பிறப்பிப்பவர்களாக இருக்கக் கூடாது.
 FACEBOOK GROUP:
https://www.facebook.com/pages/Indian-Youths-Discussion/167879393298428

 https://www.facebook.com/pages/We-need-a-revolution-in-the-education-system-in-India/154693987892239

thanx2- vimalaranjan.blogspot

Saturday, June 25, 2011

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக vs boys


விபசாரஞ் செய்யாதிருப்பாயாக

The Holy Bible: மத்தேயு 5

27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.


28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.


29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.


30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.


கொரிந்தியர் 6:9 
வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்....... தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை


கொரிந்தியர் 7:1 ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.

Wednesday, June 15, 2011

சீதையை பின்பற்றுவோம் -பெண்கள் வளரவும்

சீதையை பின்பற்றுவோம் -பெண்கள் வளரவும்
* சீதையைப் போல் ஒரு அற்புதமான பெண்மணியைப் பார்க்க முடியாது. சீதை இணையற்றவள். இனிமேல் இதுபோல் ஒரு பாத்திரத்தைப் படைக்க முடியாது எனும்படியாக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரு வேளை, ராமர்கள் கூட பலர் இருக்கலாம். ஆனால், சீதையைப் போல் இரண்டாவதாக வேறொரு சீதை இருக்க முடியாது. உண்மையான இந்தியப் பெண்மைக்குவார்க்கப்பட வேண்டிய அச்சு அவள். பெண்மை லட்சியங்கள் அனைத்தும் அந்த ஒரு சீதையின் வாழ்க்கையிலிருந்தே தோன்றியிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்கள் அனைவரின் வழிபாட்டினால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக் கும் உண்மையின் உறைவிடம் அவள். பொறுமை, சகிப்புத் தன்மை, தூய்மை இவற்றின் மொத்த வடிவாக அவள் திகழ்கிறாள். துன்ப வாழ்விலும் கற்புத்திறனைக் காப்பாற்றிக் கொண்ட அந்த சீதை நம் தேசிய தேவியாக எப்போதும் நிலைத்து வாழ்கிறாள்.






* நாமெல்லாம் சீதையின் குழந்தைகள். நம் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் அவளின் கற்புதிறமும், அன்புநெறியும் கலந்திருக்கிறது. சீதையின் வாழ்வியல் நெறியை அடியொற்றிச் சென்றால் நம் நாட்டுப் பெண்மை சிறக்கும். நம் இந்தியப் பெண்கள் வளரவும், வாழ்வில் முன்னேறவும் சீதையைப் பின்பற்றுவது ஒன்றே வழி.

Monday, May 9, 2011

தமிழ்நாட்டுப் சித்த மருத்துவம் vs English Medicine

சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாக கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்து கூற இயலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.


PART 1



PART 2

Friday, May 6, 2011

Ways to Help Save the Planet in 30 Minutes or Less





 Reduce Global Garming
You may not be able to reduce global warming, end pollution and save endangered species single-handed, but by choosing to live an earth-friendly lifestyle you can do a lot every day to help achieve those goals.

And by making wise choices about how you live, and the amount of energy and natural resources you consume, you send a clear message to businesses, politicians and government agencies that value you as a customer, constituent and citizen.
Here are five simple things you can do—in 30 minutes or less—to help protect the environment and save Planet Earth.


Drive Less, Drive Smart
Every time you leave your car at home you reduce air pollution, lower greenhouse gas emissions, improve your health and save money.

Walk or ride a bicycle for short trips, or take public transportation for longer ones. In 30 minutes, most people can easily walk a mile or more, and you can cover even more ground on a bicycle, bus, subway or commuter train. Research has shown that people who use public transportation are healthier than those who don’t. Families that use public transportation can save enough money annually to cover their food costs for the year.
When you do drive, take the few minutes needed to make sure your engine is well maintained and your tires properly inflated.


Monday, May 2, 2011

How to Recognize and Break a Cell Phone Addiction






Instructions 
    • 1
      1. Pay attention to what family and friends are saying. Do they complain about your constant cell phone use?
      * Last year I walked out of a lunch date with a person who would not get off his cell phone. After attempting several times to get him to realize that constantly answering the phone and talking while I was sitting in front of him was inconsiderate, I got up from the table, told him I was going and wished him a good lunch. Not that I was there to teach him a lesson, but I'm sure it was a lunch he will always remember.
      * Do you have any idea how difficult it is to consciously drive and talk on the cell phone at the same time? Get on line and start reading the studies. Putting down the phone is not just an opportunity to spend more quality time with people you love and care about; it is an opportunity to stay alive.
      * I personally do not drive as a passenger with a person who is constantly on the phone. I like my life and want to stay in one piece as long as possible.
    • 2
      2. Ask yourself: Do you feel anxious when you forget your phone or can't get to a call?
      * Do you feel disconnected from the world when you leave your phone at home?
      * Can you drive from point A to point B without having a phone with you?
      * Are you one of those people who call back phone numbers you see on your caller ID even when you don't know who called you, so afraid you are going to miss one call? I hate to say it, but that's really bad!!pathetic.
    • 3
      3. Ask yourself: Do you answer your phone at meals and social times? This is bad manners and unattractive.
      * When I go out with someone, I leave my phone turned off or in the car.
      * If I am expecting an important call, I say so beforehand and let the other person know that is the only reason I would answer the phone.
      * Spending time with another person is about connecting. If you want to talk on the phone, stay home.
    • 4
      4. Be honest: Does a ringing phone make you feel important? Do you talk just to talk?
      * Be honest. Do you feel important every time your phone rings?
      * It is not hard to amass a group of people who have nothing to do all day but phone and text.
      * Remember - constant chatter is not the same as a life of substance. Actually, it is quite the opposite.
    • 5
      5. Are you ever able to turn your phone off? Try it for one day.
      * Want to know if you have a problem? Turn the phone off and leave it at home. How do you feel?
      * Be aware of your anxiety, how out of sorts you feel.
      * These feelings are wrecking havoc in your life whether or not you are aware of them.


Wednesday, April 27, 2011

கிருமி பரப்பும் ATM மெசின்கள்

கிருமி பரப்பும் ATM மெசின்கள்


ATMல் பணம் எடுக்க செல்லும்போது கை உறை அணிந்து கொள்ளுங்கள் அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கையைக் கழுவுங்கள் என்கிறது அன்மைய லண்டன் ஆய்வு ஒன்று . பொதுக்கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ATMல் இருந்தும் கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.


கிருமி தொற்ரும் வழிகளுக்கான உச்ச ஐந்து இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பரபரப்பான பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களின் தொடுதிரை மற்றும் "கீ" போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக்கழிவறை இருக்கைகளிருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது, வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை மோசமாக பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் சம அளவாக இருப்பதாக தெரியவந்துள்ளது .

இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில், ‘‘பொதுக் பொதுக்கழிவறையில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்கள், ATM இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிவறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’ என்றார்.


இந்த பட்டியலில் 2வது இடத்தில் பொதுத் தொலைபேசி உள்ளது , போதுத் தொலைபேசியிலிருந்தும் கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறியுள்ளனர். இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீ பெர்ட்டையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்றுப்ப் பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. இதே பட்டியலில் பஸ் தரிப்பிடங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது .