அணு உலைகள் -மறைக்கப்படும் உண்மைகள் -விஞ்ஞானி தகவல்
We do not need Nuclear Power
Fukushima Nuclear Power Plant Reactor 3 explosion on March 14, 2011
இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூடக் கோரி விரைவில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவிருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
இப்போராட்டங்களில் கலந்துகொள்ள மேலும் பல விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அணு பொறியியலில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான் .
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த அவர் மின் தேவைக்கு அணுசக்தி சிறந்த வழி கிடையாது என 1975 ல் அங்கிருந்து விலகினார் .அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை எனவும் அவை அனைத்தும் மூடப்படவேண்டியவை என்றும் கூறும் அவர் இந்திய அணுமின் நிலையங்கள் குறித்த பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன என்றும் கூறுகிறார் .
1974 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலுள்ள அணு விஞ்ஞானிகள் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதையும் அதனை ஏற்று 1977 க்கு பிறகு அங்கு அணு உலைகள் புதிதாக கட்டப் படாததையும் நினைவுகூரும் அவர் அமெரிக்காவிலுள்ள பழைய அணுமின் நிலையங்கள் பல ஆபத்து கருதி அனல்மின் நிலையங்களாக மாற்றப்பட்டதாகவும் கூறுகிறார் .
எந்த அணு உலையுமே பாதுகாப்பானவை என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் .அணுமின் நிலையங்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மலிவானது என்று சாதாரண மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என்றும் அணு உலைகளில் கழிவுகளை பராமரிக்க எவ்வளவு செலவாகிறது போன்ற தகவல்கள் ரகசியமாகவே உள்ளன என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .
இந்திய அணு உலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முற்றிலும் மீறப்படுவதாகவும் அணு உலைகளில் விபத்து நிகழ்ந்தால் 30 கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்களை வெளியேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும் அணு உலையைக் குளிர்வித்து கடலில் கலக்கும் நீரிலுள்ள மாசுகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார் .
இந்திய அணுமின் கழகம் NPCIL 2030 க்குள் நாட்டில் மொத்த மின்தேவையில் 8 சதவீதத்தை பூர்த்தி போவதாகக் கூறுகிறது .இந்திய அணு சக்தியின் தந்தை டாக்டர் ஹோமி பாபா 2000 ஆவது ஆண்டுக்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் 140000 மெகாவாட் மின்சாரம் தயாராகும் என்று கூறினார் .ஆனால் இன்று வரை வெறும் 4500 மெகாவாட்டைதான் கடக்க முடிந்துள்ளது என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .
அணு உலையைக் கட்ட பத்து வருடங்கள் ஆகிறது என்றும் அணு உலையின் செயல்பாட்டை நிறுத்த அணு உலையை கட்ட ஆகும் அதே அளவு செலவு ஆகும் .மேலும் இதற்கான தொழில் நுட்பமும் இந்தியாவிடம் கிடையாது என்பதால் வேறு வழியின்றி அணு உலைகளின் ஆயுட்காலத்தை சில ஆண்டுகள் நீட்டிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர் .
சமீபத்தில் விபத்து நிகழ்ந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய திருவனந்தபுரத்தை சார்ந்த டாக்டர் யமுனா அணு உலையைக் குளிர்விக்க பயன்படுத்தப் பட்ட கடல் நீர் அப்பகுதியிலுள்ள மொத்த கடல் வளத்தையும் அழிக்கக்கூடியது என்கிறார்.அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடல் உயிரியல் பேராசிரியராக விளங்கும் டாக்டர் அஜித் குமாரும் இதே கருத்தை கூறுகிறார் .
நன்றி : டி என் எ இந்தியா
BY உங்கள் : Karthik Vaigai
No comments:
Post a Comment