Wednesday, April 27, 2011

கிருமி பரப்பும் ATM மெசின்கள்

கிருமி பரப்பும் ATM மெசின்கள்


ATMல் பணம் எடுக்க செல்லும்போது கை உறை அணிந்து கொள்ளுங்கள் அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கையைக் கழுவுங்கள் என்கிறது அன்மைய லண்டன் ஆய்வு ஒன்று . பொதுக்கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ATMல் இருந்தும் கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.


கிருமி தொற்ரும் வழிகளுக்கான உச்ச ஐந்து இடங்கள் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பரபரப்பான பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களின் தொடுதிரை மற்றும் "கீ" போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது. பொதுக்கழிவறை இருக்கைகளிருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது, வயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை மோசமாக பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் சம அளவாக இருப்பதாக தெரியவந்துள்ளது .

இதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில், ‘‘பொதுக் பொதுக்கழிவறையில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்கள், ATM இயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிவறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’ என்றார்.


இந்த பட்டியலில் 2வது இடத்தில் பொதுத் தொலைபேசி உள்ளது , போதுத் தொலைபேசியிலிருந்தும் கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறியுள்ளனர். இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீ பெர்ட்டையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்றுப்ப் பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை. இதே பட்டியலில் பஸ் தரிப்பிடங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது .

No comments:

Post a Comment