Wednesday, June 15, 2011

சீதையை பின்பற்றுவோம் -பெண்கள் வளரவும்

சீதையை பின்பற்றுவோம் -பெண்கள் வளரவும்
* சீதையைப் போல் ஒரு அற்புதமான பெண்மணியைப் பார்க்க முடியாது. சீதை இணையற்றவள். இனிமேல் இதுபோல் ஒரு பாத்திரத்தைப் படைக்க முடியாது எனும்படியாக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரு வேளை, ராமர்கள் கூட பலர் இருக்கலாம். ஆனால், சீதையைப் போல் இரண்டாவதாக வேறொரு சீதை இருக்க முடியாது. உண்மையான இந்தியப் பெண்மைக்குவார்க்கப்பட வேண்டிய அச்சு அவள். பெண்மை லட்சியங்கள் அனைத்தும் அந்த ஒரு சீதையின் வாழ்க்கையிலிருந்தே தோன்றியிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்கள் அனைவரின் வழிபாட்டினால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக் கும் உண்மையின் உறைவிடம் அவள். பொறுமை, சகிப்புத் தன்மை, தூய்மை இவற்றின் மொத்த வடிவாக அவள் திகழ்கிறாள். துன்ப வாழ்விலும் கற்புத்திறனைக் காப்பாற்றிக் கொண்ட அந்த சீதை நம் தேசிய தேவியாக எப்போதும் நிலைத்து வாழ்கிறாள்.






* நாமெல்லாம் சீதையின் குழந்தைகள். நம் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் அவளின் கற்புதிறமும், அன்புநெறியும் கலந்திருக்கிறது. சீதையின் வாழ்வியல் நெறியை அடியொற்றிச் சென்றால் நம் நாட்டுப் பெண்மை சிறக்கும். நம் இந்தியப் பெண்கள் வளரவும், வாழ்வில் முன்னேறவும் சீதையைப் பின்பற்றுவது ஒன்றே வழி.

1 comment:

  1. நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மையே! ஆனால் நிலைமை எப்படி இருக்கிறது என்றால், நம் அம்மாவிடம்கூட,நம் சகோதரிகளிடம் கூட சீதையின் சாயல் கொஞ்சம்கூட இல்லையே. நாம் ராமனாக வேண்டுமானால் முயற்சிக்கலாம். நாட்டில் நிறையவே சீதைகள் இருக்கிறார்கள். ஒரு ராமனால்தான் ஒரு சீதையை அடையாளம் காணமுடியும்.

    ReplyDelete