Showing posts with label boys vs girls. Show all posts
Showing posts with label boys vs girls. Show all posts

Saturday, June 25, 2011

விபசாரஞ் செய்யாதிருப்பாயாக vs boys


விபசாரஞ் செய்யாதிருப்பாயாக

The Holy Bible: மத்தேயு 5

27. விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.


28. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.


29. உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.


30. உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.


கொரிந்தியர் 6:9 
வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்....... தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை


கொரிந்தியர் 7:1 ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.

Wednesday, June 15, 2011

சீதையை பின்பற்றுவோம் -பெண்கள் வளரவும்

சீதையை பின்பற்றுவோம் -பெண்கள் வளரவும்
* சீதையைப் போல் ஒரு அற்புதமான பெண்மணியைப் பார்க்க முடியாது. சீதை இணையற்றவள். இனிமேல் இதுபோல் ஒரு பாத்திரத்தைப் படைக்க முடியாது எனும்படியாக அவள் படைக்கப்பட்டிருக்கிறாள். ஒரு வேளை, ராமர்கள் கூட பலர் இருக்கலாம். ஆனால், சீதையைப் போல் இரண்டாவதாக வேறொரு சீதை இருக்க முடியாது. உண்மையான இந்தியப் பெண்மைக்குவார்க்கப்பட வேண்டிய அச்சு அவள். பெண்மை லட்சியங்கள் அனைத்தும் அந்த ஒரு சீதையின் வாழ்க்கையிலிருந்தே தோன்றியிருக்கின்றன. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மக்கள் அனைவரின் வழிபாட்டினால் இன்னும் வாழ்ந்து கொண்டிருக் கும் உண்மையின் உறைவிடம் அவள். பொறுமை, சகிப்புத் தன்மை, தூய்மை இவற்றின் மொத்த வடிவாக அவள் திகழ்கிறாள். துன்ப வாழ்விலும் கற்புத்திறனைக் காப்பாற்றிக் கொண்ட அந்த சீதை நம் தேசிய தேவியாக எப்போதும் நிலைத்து வாழ்கிறாள்.






* நாமெல்லாம் சீதையின் குழந்தைகள். நம் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் அவளின் கற்புதிறமும், அன்புநெறியும் கலந்திருக்கிறது. சீதையின் வாழ்வியல் நெறியை அடியொற்றிச் சென்றால் நம் நாட்டுப் பெண்மை சிறக்கும். நம் இந்தியப் பெண்கள் வளரவும், வாழ்வில் முன்னேறவும் சீதையைப் பின்பற்றுவது ஒன்றே வழி.

Saturday, September 25, 2010

உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது vs Bible < > Quran

முதலாவதாக தகுதியான உடையாயிருக்கவேண்டும்:
உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது
 நிர்வாணத்தை காட்டும்படியாகவோ, ஒருவரை வசீகரம் அல்லது கவர்ச்சி செய்யும்படியோ இருக்கலாகாது. அது தீய நோக்கம், (நீதிமொழிகள் 24:9 தீயநோக்கம் பாவமாம்). உடையானது உடலுடன் ஒட்டிக்கொண்டு உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது. அதிக அளவில் பேன்ட், ஜீன்ஸ் இப்படி ஒட்டியவாறு பாகங்களைக் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

இரண்டாவதாக உடைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகும்:

உதாரணமாக நாம் அணியும் வேஷ்டி வெளிநாடுகளில் ஆணின் உடையல்ல. தாவணியும் பாவாடையும் வடநாட்டில் பெண்ணின் உடையுமல்ல. தமிழ்நாட்டின் உடை வேறு, காஷ்மீரின் உடை வேறு. எனவே நாம் வசிக்கும் இந்த எல்லைக்குள் நிதானிக்கவேண்டும். ஒரு நாட்டில் பேன்ட் பெண்ணின் உடை என்றால் அங்கு அவர்கள் அணியலாம். ரோமர் 14:13 ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இது மரணத்துக்கு ஏதுவான பாவம் அல்ல என்று எண்ணுகிறேன் (I யோவான். 5:16,17)

மூன்றாவதாக உடையானது செய்யும் தொழிலை சார்ந்தது:

நீதிமொழிகள் 7:10 அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள் என்று வாசிக்கிறோம். தற்போதும் நர்ஸ், தீயணைப்பவர், காவல்துறை என செய்யும் தொழிலுக்கு ஒரு உடை ஒழுங்கு உண்டு. ஐஸ் (பனிக்கட்டி) மலைகளுக்கு செல்லும்போது பாவாடை, சேலை அணிந்து சென்றால் நம் உடல் உறைந்து விடும். அங்கு அதற்குரிய உடையை அணியவேண்டும். அப்படியே விண்வெளிக்கும் ஒரு உடை உண்டு.
பெண்ணின் உடையை ஆண் (அல்லது ஆணின் உடையை பெண்) அணிந்தால் கிருமிகள் பரவலாம் என்ற காரணத்தினால்கூட தேவன் சொல்லியிருக்கலாம். ஆண் பெண் யார் என்ற குழப்பங்கள் வரலாம்.
thanx to -tamilbibleqanda.blogspot.com