"யாரோடு நீ பழக நினைக்கின்றாயோ அவனோடு நீ இனிமையாக பழக வேண்டும்.
கொஞ்ச காலத்திற்கு அதை நீ நட்பாக கருதக்கூடாது.
வெறும் பழக்கமாக தான் கருத வேண்டும். உனக்கு கஷ்டம் வந்தபொழுது அவன் கை கொடுத்தால்,
உன்னை பற்றி பிறர் தவறாக பேசும்போது அவன் தடுத்து பேசியதாக அறிந்தால், அவனை நீ நம்ப தொடங்கலாம். ஆகவே அவன் உன் மீது வைத்திருக்கும் அன்பும் உண்மையாகத்தான் இருக்க முடியும். நீ அழும்பொழுது அவனுக்கு அழுகை வருகிறது என்றால் அது தான் நட்பு"....
திருக்குறள் vs நட்பு
" முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. "
...உரை: இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்....
நட்பு vs சுவாமி விவேகானந்தர்
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர், அன்பைக் கொள்ளாமல் பொருளை மட்டும் கொள்ளும் விலைமகள் போன்றவர் ஆவார். அவருடைய நட்பினை ஏற்றுக் கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment