முதலாவதாக தகுதியான உடையாயிருக்கவேண்டும்:
உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது |
நிர்வாணத்தை காட்டும்படியாகவோ, ஒருவரை வசீகரம் அல்லது கவர்ச்சி செய்யும்படியோ இருக்கலாகாது. அது தீய நோக்கம், (நீதிமொழிகள் 24:9 தீயநோக்கம் பாவமாம்). உடையானது உடலுடன் ஒட்டிக்கொண்டு உடலின் பாகங்களை காட்டுவதாக இருக்கக்கூடாது. அதிக அளவில் பேன்ட், ஜீன்ஸ் இப்படி ஒட்டியவாறு பாகங்களைக் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக உடைகள் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்டதாகும்:
உதாரணமாக நாம் அணியும் வேஷ்டி வெளிநாடுகளில் ஆணின் உடையல்ல. தாவணியும் பாவாடையும் வடநாட்டில் பெண்ணின் உடையுமல்ல. தமிழ்நாட்டின் உடை வேறு, காஷ்மீரின் உடை வேறு. எனவே நாம் வசிக்கும் இந்த எல்லைக்குள் நிதானிக்கவேண்டும். ஒரு நாட்டில் பேன்ட் பெண்ணின் உடை என்றால் அங்கு அவர்கள் அணியலாம். ரோமர் 14:13 ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். இது மரணத்துக்கு ஏதுவான பாவம் அல்ல என்று எண்ணுகிறேன் (I யோவான். 5:16,17)
மூன்றாவதாக உடையானது செய்யும் தொழிலை சார்ந்தது:
நீதிமொழிகள் 7:10 அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந் தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள் என்று வாசிக்கிறோம். தற்போதும் நர்ஸ், தீயணைப்பவர், காவல்துறை என செய்யும் தொழிலுக்கு ஒரு உடை ஒழுங்கு உண்டு. ஐஸ் (பனிக்கட்டி) மலைகளுக்கு செல்லும்போது பாவாடை, சேலை அணிந்து சென்றால் நம் உடல் உறைந்து விடும். அங்கு அதற்குரிய உடையை அணியவேண்டும். அப்படியே விண்வெளிக்கும் ஒரு உடை உண்டு.
பெண்ணின் உடையை ஆண் (அல்லது ஆணின் உடையை பெண்) அணிந்தால் கிருமிகள் பரவலாம் என்ற காரணத்தினால்கூட தேவன் சொல்லியிருக்கலாம். ஆண் பெண் யார் என்ற குழப்பங்கள் வரலாம்.
thanx to -tamilbibleqanda.blogspot.com