Monday, August 2, 2010

Nearly 50 percent of the world's hungry live in India

Nearly 50 percent of the world's hungry live in India, a low-income, food-deficit country.

Around 35 percent of India's population - 350 million - are considered food-insecure, consuming less than 80 percent of minimum energy requirements.

Nutritional and health indicators are extremely low. Nearly nine out of 10 pregnant women aged between 15 and 49 years suffer from malnutrition and anaemia.

Anaemia in pregnant women causes 20 percent of infant mortality. More than half of the children under five are moderately or severely malnourished, or suffer from stunting.
thanx........WORLD HEALTH ORG

Puthiya Thalaimurai weekly book

Puthiya Thalaimurai   weekly book புதிய தலைமுறை....
புதிய தலைமுறை வலை தளத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

பெருகி வரும் வலை தளங்களின் எண்ணிக்கையின் மத்தியில், புதிய தலைமுறையின் வருகைக்குக் காரணம் என்ன ? எதைச் சாதிக்க இந்த முயற்சி என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழலாம்.

வலை தளத்தின் பெயர் குறிப்பது போல, தமிழகத்தின் புதிய தலைமுறையின் முன்னேற்றத்திற்கு ஒரு உந்துகோலாகவும், அவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாகவும் விளங்கும் நோக்கத்துடன் இவ்வலைத்தளம் மலர்ந்திருக்கிறது. உலகிலேயே இளைஞர்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா. நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் புதிய தலைமுறை இளைஞர்களுக்குச் சமூகம் சார்ந்த செய்திகளை எந்த சார்புமின்றி வழங்கவும், வளர்ச்சிக்கு வழிகாட்டவும், மாற்றத்திற்கான மனநிலையை உருவாக்கவும், இவ்வலைத்தளம் விழையும்.

இந்தியா வல்லரசாக மாறவேண்டுமெனில், மாற்றம் எனும் மாமந்திரம், எல்லோரிடையேயும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பரவ வேண்டும். எப்படி மாற்றம் ஏற்பட வேண்டும் என்னும் சிந்தனைகள் முதலில் புதிய தலைமுறையினரிடையே எழவேண்டும். மனித நேயத்தை மீறி ஓங்கிவிட்ட இனப்பற்றும், நாட்டின் நலனை விஞ்சிவிட்ட மொழிப்பற்றும் சமூக நலத்தைச் சாய்த்து உயர்ந்துவிட்ட சாதிப்பற்றும், பொது நலத்தை பொசுக்கிவிட்டுப் பெருகியுள்ள சுயநலப் நோக்கும், மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

நாடு, சமூகம், சுற்றம் மட்டும் மாற வேண்டும் எண்ணாமல், ஒவ்வொரு தனி மனிதனும் தானாக மாறவேண்டும். தான் காண நினைக்கும் மாற்றத்தின் முதல்படியாக ஒவ்வொருவரும் மாற வேண்டும்,

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி எனப்படும் த மிழ்குடி இன்னும் தழைத்திருப்பது காலத்திற்கேற்ப மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புதியன புகுத்தி , பழையன கழித்ததால்தான். ஆற்றலையோ அறிவையோ விட மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் இனமே தழைக்கும் என்பதை உணர்ந்து பின்பற்றியதால்தான்.

அப்படியொரு மாற்றத்தை இந்த நவீன யுகத்திலும் புதிய தலைமுறையினரிடம் புகுத்தி , மேலும் மாண்புடன் நம் நாடு உயர்ந்திட இந்த வலைத்தளம் செயல்படும்.

அம்முயற்சிக்கு நீங்கள் உறுதுணையாய் இருந்து,  உற்சாகப்படுத்துவீர்கள் என உங்களை நம்பி களத்தில் இறங்குகிறோம். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து, இனி ஒருவிதி செய்வோம். அதை எந்நாளும் காப்போம்.
 
thanx ....
Puthiya Thalaimurai   weekly book